செம்மொழியாம் தமிழில் எந்த தமிழ் செம்மொழி?

தமிழ் மொழி தற்பொழுது செம்மொழி என்னும் தரத்தை பெற்றது அனைவரும் அறிந்ததே அதிலும் கலைஞரின் பங்கு எத்துனை என்பதும் அறிந்ததே.

என் கேள்வி என்னவென்றால் இன்று தமிழில் பலவகை தமிழ் இருக்கின்றது.

சென்னை தமிழ் (சென்னையின் தேசிய மொழி)
கொங்கு தமிழ்
நெல்லை தமிழ்
சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை தமிழ்
குமரி தாயின் அன்பு மொழியாம் நாகர்கோயில் தமிழ்
கிள்ளை மொழி பேசும் ரம்பா தமிழ், நமீதா தமிழ் இன்னும் பல பல.

இவை யாவுமே செம்மொழியோ? அப்படியெனில் இங்கு உபாயோகிக்கும் வார்த்தைகள் பலவற்றிக்கு எந்த அகராதியில் அர்த்தம் தெளிந்து கொள்ளலாம்

கொய்யால, அல்பம், ஆப்பு, மொள்ளமாரி, முடிச்சவிக்கி, சோமாறி, கேப்மாரி, அபீட்டு, மெர்சல், தொம்மை, டுபாக்கூர், டுபுக்கு, சாவுகிராக்கி, குந்து.

தமிழ் மொழி (எந்த தமிழ்) செம்மொழி என்றால் மேலே கொடுக்கப்பட்ட வார்த்தைகளும் அதில் அடக்கமா?

குறிச்சொற்கள்: ,

பின்னூட்டமொன்றை இடுக